- நாட்டு நலப்பணி திட்டம்
நிறைவு விழாகரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சிறப்பு ஏழு நாள் முகாமின் கடைசி நாளான இன்று 30.09.2019 காலை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கரூர் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் இல் 30 மாணவிகளும் , அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 25 பேரும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இப்பேரணி அரசு மகளிர் பள்ளியில் துவங்கி ஜவகர் பஜார் வழியாக சென்று எ.ஆர்.எஸ் கல்லூரியில் முடிவடைந்தது. அரசு மகளிர் பள்ளி திட்ட அலுவலர் திருமதி. உமா மகேஸ்வரி அவர்களும் , எ.ஆர்.எஸ் கல்லூரியின் நிறுவனர் முனைவர். அபுல் ஹசேன் மற்றும் தாளாளர் திருமதி. ரீகானா பேகம் அவர்களும் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் திருமதி. கவிதா அவர்கள் , “மாணவிகளும் சமூக பங்களிப்பும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
Check Also
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்த வழக்கில் விரைவில் தீர்ப்பு…
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். …