
மதுரையில் பெட்கிராட் நிர்வாக இயக்குனரும், முன்னாள் கவுன்சிலருமான சுப்புராம் அவர்களின் தலைமையில் திருமண விழா நடைபெற்றது.
மதுரை மகபூப்பாளையம் சுகுணா திருமண மஹாலில் சி.பி.ஐ.எம் பகுதி செயலாளர் சேதுராமன் மற்றும் சீனிவாசன், முருகேஸ்வரி இல்லத் திருமண விழா பெட்கிராட் தொழில் பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், கவுன்சிலர்கள் மகாலெட்சுமி, ஜென்னி அம்மாள், முன்னாள் கவுன்சிலர் கார்னர்.பாஸ்கர், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கணேசன், பகுதி செயலாளர் ஸ்டாலின், திமுக வட்டச் செயலாளர் அழகுசுந்தரம், அதிமுக நிர்வாகிகள் டி.ஜே.மனோகரன், ஜான்சன்,லாரன்ஸ், மதிமுக வட்டச் செயலாளர்கள் ஜெப்ரி, ஆட்டோ சுடலை மணி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், காமராஜ், ஸ்ரீ காணியாளன் பொன் முனியாண்டி சுவாமி கோவில் செயலாளர் ஏ.பி.குமார், உதவி செயலாளர் அருணகிரி, பொருளாளர் மும்பை ஆர்.கண்ணன், இணைச்செயலாளர் ராஜசேகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்கள் சதீஷ்குமார் – பானுப்பிரியா ஆகியோர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.