
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு கடுமையான கோடை வெயிலை முன்னிட்டு, அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக வள்ளலார் நினைவு நீர்,மோர் பந்தலை திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக நகரச் செயலாளரும், தொழிலதிபருமான மு.சி.சோ.பா ஸ்ரீதர் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு அன்னை வசந்தா டிரஸ்ட் தலைவர் அமுதா பழனிமுருகன் தலைமை வகித்தார். விழாவிற்கு வருகை தந்தவர்களை டிரஸ்ட் துணைச் செயலாளர் ரகுபதி வரவேற்று பேசினார்.
திருமங்கலம் நகர் வளர்ச்சி ஆலோசனை குழு நிர்வாகிகள் சிவக்குமார், சங்கரன், பார்த்தசாரதி, இருளப்பன்,சக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கவுன்சிலர்கள் மச்சவள்ளி செல்வம், வினோத் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் சித்ரா ரகுபதி, அருள்ஜோதி, காளியப்பன், அழகர்சாமி, குருபிரசாத், அன்னபூரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.