
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 385 நாட்களுக்கும் மேலாக ஆதரவற்ற முதியோர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளின் மற்றுமொரு முயற்சியாக அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பம் பயிற்சி பள்ளி தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு டிரஸ்ட் தலைவர் அமுதா பழனி முருகன் தலைமை வகித்தார்.
திருமங்கலம் மக்கள் நல சங்கத் தலைவர் சக்கையா, செயலாளர் இருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இறையன்பு நூலகம் பார்த்தசாரதி, வழக்கறிஞர் ராஜசேகரன், முன்னாள் கவுன்சிலர் பாண்டியன், முன்னாள் ராணுவ வீரர் மருதுபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிர்வாகிகள் காளியப்பன், அழகர்சாமி, அருள்ஜோதி, ஆறுமுகம் ஆகியோர் நன்றியுரை கூறினர்.
விழாவிற்கு வருகை தந்தவர்களை டிரஸ்ட் துணைச் செயலாளர் ரகுபதி வரவேற்று பேசினார்.
இதில் சிலம்பம் முதன்மை பயிற்சியாளர் முத்துக்குமார், ஆண்கள் சிலம்பம் பயிற்சியாளர் ராஜா, பெண்கள் பயிற்சியாளர் கரிஷ்மா மற்றும் நிர்வாகிகள் குருபிரசாத், அன்னபூரணி, தேன்மொழி, மலர்விழி, ரோகுபாண்டி, கணேசன், அய்யம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.