
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர்.பாரிஸ் ஆலோசனைப்படி, தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு தலைமையில்
மதுரை கீரைத்துரையில் ஜோதி அறக்கட்டளை இணைந்து நடத்தும் நகர்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு
மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர்.வி.பி.ஆர். செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில மகளிரணி துணைத்தலைவி குருலட்சுமி கஜேந்திரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஷர்மிளாபானு, மாநில இணைச்செயலாளர் பிரகாஷ்,மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் சங்கர்பிரபு, தெற்கு மாவட்ட செயலாளர் பவர் ராஜேந்திரன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயராஜா,வடக்கு மாவட்ட துணைத் தலைவர்கள் இன்சூரன்ஸ் ராஜா, ஷேக் அப்துல்லா, முருகேசன்,
இணைச் செயலாளர்கள் பால் முனீஸ்வரன், வீரமணி பிரபு, மாநகர் வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் இளமி நாச்சியம்மாள், மாநகர் மகளிர் அணி தலைவி அனிதா ரூபி, மகளிரணி துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.