
தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு செயற்பட்டு வரும் பன்னாட்டு சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் ஏற்பாட்டில் இலங்கை வவுனியா,குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் 35 பேருக்குத் தேவையான புத்தகப் பைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சோழன் நிறுவனத்தின் இலங்கை கிளை தலைவர் முனைவர். யோகதாசன் யூட் நிமலன்,வவுனியா மாவட்டத் தலைவர் பாக்கியநாதன் லம்போதரன் போன்றோர் மாணவ,மாணவியருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்கள்.
சோழன் நிறுவனத்தின் சுவிட்சர்லாந்து கிளை தலைவர் மணிசேகரன் மற்றும் இத்தாலி நாட்டில் வசித்து வரும் கீரன் குலதுங்கசேகரம் ஆகியோர் அனுசரனையில் இப்பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது