
மதுரை உலக தமிழ் சங்கத்தில் வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் 11-வது வெற்றி விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினர்.
விழாவிற்கு வருகை தந்த அமைச்சரை
வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் நிறுவனர் பரத் சீமான்,
இயக்குனர்கள்
சபரி, பிரகாஷ் ஆகியோர் வரவேற்று பேசினர்.
தென்னிந்தியாவில் 45 கிளைகளை கொண்ட இந்நிறுவனத்தில் சுமார் 1656 மாணவ மாணவிகள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் தி இந்து பத்திரிக்கையின் முதுநிலை மேலாளர் சங்கர் சூரிய நாராயணன், நியூஸ் 7 தமிழ் நிறுவனத்தின் எடிட்டர் தியாக செம்மாள், மதுரை வைகை எஜுகேசனல் டிரஸ்ட் தாளாளர் திரு செந்தூரன், வீராந்ரா ரேஸ் தலைமை நிர்வாகி விக்னேஸ்வர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினர்.நிகழ்ச்சியின் முடிவில்
ராமரத்தினம் நன்றியுரை கூறினார்.