
மதுரையில் கோடை வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளிய வர வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் முக்கியமாக வேலை நிமித்தமாக வெளியே வந்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வெயிலையும் பொருட்படுத்தாது தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.
மேலும் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து மதுரை மக்களை காக்கும் விதமாக வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர்,மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஐய்யப்ப ராஜா தலைமை வகித்தார். இதில் துணைத் தலைவர்கள் அருள் தமிழரசன், நிரஞ்சன் குமார், மாநகர் பொறுப்பாளர் அமிழ்தன், மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், ராமராஜ், ஜெயமுருகன் மற்றும் வழக்கறிஞர்கள் சுரேஷ்குமார், சிவநந்தினி, ஆகாஷ் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.