Saturday , June 3 2023
Breaking News
Home / Politics / எங்கே செல்கிறது அரவக்குறிச்சியின் எதிர்காலம்?
MyHoster

எங்கே செல்கிறது அரவக்குறிச்சியின் எதிர்காலம்?

கரூர் மாவட்டத்தில் முக்கியமான தாலுகா அரவக்குறிச்சி ஆகும் இன்றுவரை அது பெயர் அளவில் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் செயல்படுவது போல மக்கள் வேதனையுடன் இருக்கிறார்கள்…

அரவக்குறிச்சி மக்களின் எதிர்பார்ப்புகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் கண்டுக்காமல் இருப்பது அதை கண்டித்து கேட்பவர்களையும் நிராகரித்து வருவதும் கடந்த சில நாட்களில் பத்திரிக்கையில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன…

அப்படி என்னதான் அரவக்குறிச்சி மக்களின் கோரிக்கைகள் இருக்கும்?

அரவக்குறிச்சி தாலுகாவில் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கொண்டு வரப்படுமா?
நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவார்களா?, கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கொடுப்பார்களா?, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சொந்த கட்டிடத்திற்கு கொண்டு செல்வார்களா?, மின்சார செயற்பொறியாளர் அலுவலகம் அரவக்குறிச்சிக்கு கிடைக்குமா?, பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருமா?,
சார் பதிவாளர் அலுவலகம் புதிதாக கட்டி திறக்கப்படுமா?, நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே கணக்கு பிள்ளை புதூரில் உள்ள தடுப்பணை தூர் வாரி நீர் ஆதாரம் சேமிக்கப்படுமா?, நங்காஞ்சி ஆற்றின் கடைமடை கரடிப்பட்டியில் தடுப்பணை கட்டப்படுமா?, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படுமா?, அரவக்குறிச்சிக்குள் செல்லும் சாலைகள் சீர் செய்யப்படுமா?

இது போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் மக்கள் விழி பிதுங்கி கொண்டிருக்கின்றனர்….

இது போன்ற செயல்களை அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் எந்த அளவில் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்துதான் அரவக்குறிச்சியின் எதிர்காலம் அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை…

Bala Trust

About Admin

Check Also

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை நிலையம், பாலா அறக்கட்டளை, வெள்ளியணை ஊராட்சி, அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES