
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பாக மதுரை பழங்காநத்தம் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாக கூறப்படும் செங்கல்பட்டு மாவட்ட வீட்டு வசதி துணைப்பதிவாளர் உமாதேவியை கண்டித்து மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் சீனியப்பா முன்னிலை வகித்தார்.TNGEA
மாவட்ட செயலாளர் நீதிராஜா, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் இரா.தமிழ், மாவட்ட இணை செயலாளர்கள் பரமசிவம், ராமதாஸ், மாவட்ட தலைவர் மூர்த்தி, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ராஜூ, வட்டக்கிளை செயலாளர்கள் முத்துவேல், பழனிவேல் ஆகியோர் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினர்.
TAGCEA மாநில செயலாளர் சந்திர போஸ் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் தீனதயாளன் நன்றியுரை கூறினார்.