
மதுரை செல்லூரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சங்கேஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்தும் அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானத்தை வழங்கி வருகின்றனர்.
மேலும் மாணவ,மாணவிகளுக்கு நோட்புக் கல்வி உபகரணங்கள் போன்ற கல்வி உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் செல்லூர் திருவாப்புடையார் கோவில் அருகே உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் அறக்கட்டளை நிறுவனர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்த பொது மருத்துவ முகாமை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர் லோகமணி ரஞ்சித்குமார் தொடங்கி வைத்தார்.
மருத்துவர்கள் கோதை, ஸ்ரீ லேகா, காயத்ரி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இம்முகாமில் 200- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.மேலும் பிசியோதெரபி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இவ்விழாவில் அறக்கட்டளை தலைவர் ஸ்ரீ சீனிவாசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் வீரபாண்டியன், துணைத்தலைவர் சதீஸ்குமார், துணைச்செயலாளர் பாண்டியன்,துணை பொருளாளர் P S சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.