
மதுரை கோ.புதூர் அரசினர் ஐ.டி.ஐ வளாகத்தில் தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் கிளைத் தலைவர் தோழர் முத்துவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் TNITOA தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார்.
துணை இயக்குனர் ரமேஷ்குமார், அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் கே.எஸ் அமுதா, TNGEA மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்டச் செயலாளர் நீதிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ் ஆகியோர் வாழ்த்துரை கூறினர். துணை இயக்குனர் ரமேஷ்குமார், மாநிலத் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் மாநில செயலாளர் நவநீதன் நன்றியுரை கூறினார்.
மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.