
பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு மதுரை காளவாசல் சிக்னலில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
முன்னதாக சொக்கலிங்க நகர் பகுதியில் கிளைத் தலைவர் முருகன் தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் சிறப்பாக செய்திருந்தார். காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி தனலட்சுமி,
மாவட்ட துணைத் தலைவர் மீனா, மாவட்ட செயலாளர் மெகருன்னிஷா, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் அருள்மிகு மாரி, மீனவரணி மாவட்ட தலைவர் இளங்கோமணி, இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்டச் செயலாளர் சசிகுமார், உள்ளாட்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கே.எம் முத்துராஜ், மற்றும் நிர்வாகிகள் சாய் ஸ்ரீராம் கிருஷ்ணமூர்த்தி, ராஜா, துர்க்கை. செந்தில், ஆன்மீக பிரிவு கண்ணன், மாரீஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்