
மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்தரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினத்தை கொண்டாடும் விதமாக மதுரை மாநகர் காளவாசல் மண்டலுக்கு உட்பட்ட பூத் கிளைத் தலைவர்கள் முருகன், பாண்டியம்மாள், அமுதா, சிவா, மூர்த்தி, தனம், பிச்சை, பரதன், முத்துப்பாண்டி, கார்த்திகேயன் ஆகிய கிளைத் தலைவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று அவர்களை கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்தும் இனிப்பு மற்றும் புத்தாடைகளை பாஜக மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் வழங்கி கௌரவித்தார்.
மேலும் 2024 ஆம் ஆண்டு வரவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதிருந்தே களப்பணியை தொடங்குங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கே.எம் முத்துராஜ், இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்டச் செயலாளர் சசிக்குமார் மற்றும் நிர்வாகிகள் சிவக்குமார், ஸ்ரீராம், ஆன்மீகப் பிரிவு கண்ணன், ராஜன், ராதாகிருஷ்ணன், மாரிஸ்வரன், பொன்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.