
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக வள்ளலார் நினைவு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
கோடை வெயில் கடுமையாக உள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளிய வர வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் முக்கியமாக வேலை நிமித்தமாக வெளியே வந்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வெயிலையும் பொருட்படுத்தாது தங்களது பணிகளை செய்து வருகின்றனர். தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பணி நிமித்தமாக வெளியே வரும் திருமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
இவர்களின் கஷ்டத்தை போக்கும் பொருட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் நீதிமன்றம் அருகே அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக வாடகை கார் ஓட்டுநர் நலச்சங்கம் இணைந்து நீர் மோர் பந்தல் திறந்துள்ளனர்.
திருமங்கலம் நகர் வாடகை கார் ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் தலைவர் அரசு கண்ணன் திறந்து வைத்தார். அன்னை வசந்தா டிரஸ்ட் துணைத்தலைவர் ரகுபதி வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் இருளப்பன், செயலாளர் சக்கையன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் ஓட்டுநர்கள் நலச்சங்க செயலாளர் ராஜாபாய், பொருளாளர் பெருமாள், துணைத் தலைவர் கனி, நிர்வாக குழு முகமது யாசின், கவிராஜா, அழகுராஜா,டிரஸ்ட் நிர்வாகிகள் தலைவர் அமுதவள்ளி, ஆறுமுகம்,சித்ரா ரகுபதி, அருள்ஜோதி, காளியப்பன், அழகர்சாமி, குருபிரசாத், அன்னபூரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோடை வெயிலில் மக்களை காப்பதற்காக நீர் மோர் பந்தலை திறந்துள்ள அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டி சென்றனர்.