தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் பாரீஸ் வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு ஆலோசனைப்படி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏழை,எளிய முதியோர்களுக்கு தொடர்ந்து இடைவிடாமல் 380 நாளாக மதிய உணவை வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளின் சிறப்பான சமூக சேவையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் இரண்டு அரிசி சிப்பத்தை, அன்னை வசந்தா டிரஸ்ட் துணைத் தலைவர் ரகுபதி அவர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மாநில துணைச் செயலாளர் பிரகாஷ் ,மாவட்ட துணைச்செயலாளர் சிவதிருமாறன், டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி, துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் அருள்ஜோதி, கௌரவ ஆலோசகர் காளியப்பன், செல்வம் உடன் இருந்தனர்.