
பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பீ.கே மூக்கையா தேவர் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பகவதி, மண்டல தலைவர் நாகராஜ்தேவர், மாநில துணைத்தலைவர் முத்துராமலிங்கம், மற்றும் நிர்வாகிகள் வைகை.பத்மநாபன், சாலை.பிரபாகரன், ஒச்சாத்தேவர், எஸ்.ஆர்.பாண்டி, வழக்கறிஞர் மணிகண்டன், செல்வராஜ், அர்ஜூன், தமிழரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.