கல்வித்தந்தை பீ.கே மூக்கையா தேவரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பாக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் இராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.