
கல்வித்தந்தை பீ.கே மூக்கையா தேவரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் பி.கே.மூக்கையாத் தேவரின் சிலைக்கு பாஜக சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் கீரைத்துரை குமார், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் வினோத்குமார், காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி தனலட்சுமி, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் தீபா செல்லப்பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.