
இதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் டாக்பியா சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக சிறப்பாக நடந்தேறியது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்டத்தின் டாக்பியா-வின் முன்னால் மாவட்ட செயலாளரும் டாக்பியா ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளருமான திரு.A.M.ஆசிரியத்தேவன் அவர்களின் சீரிய தலைமையிலும் மாவட்ட தலைவர் திரு.K.அருணகிரி, மற்றும் மாவட்ட பொருளாளர் திரு.K. ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பாக நடந்தது.
இதில் மாவட்ட துணை தலைவர்கள் திரு.K.சரவணன், திரு.V.M.பாலகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர்கள் திரு.S.செல்லாண்டி, திருமதி.S.வனிதா ஆகியோரும் டாக்பியா ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் திரு.K.முருகன், திரு.முருகேசன் அவர்களும் போராட்ட குழு செயலாளர் திரு.P.மணிகண்டன் தலைவர் திரு.M.காளிப்பாண்டியன் கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் தேனி மாவட்டம் ஆகியோரும் கலந்து முழுவதிலும் இருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பினர்
நிறைவாக மேற்கண்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சில மாவட்டங்களில் பயிர் கடன் பட்டுவாடாவில் விதிமீறல் என்று கூறி பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக விளக்கிக்கொள்ளப்பட வேண்டும். பயிர் கடன், நகை கடன், மகளிர்குழு கடன், அனைத்திற்கும் உரிய தொகையினை வட்டி இழப்பின்றி வழங்க வேண்டும்.
தவனை தவறிய நகை கடன் மீது ஏல நடவடிக்கை செய்யப்பட்ட இழப்பு தொகையினை எவ்வித நிபந்தனையும் இன்றி சங்கத்தின் நட்ட கணக்கிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்,
செயலாளர் பணிமாறுதளுக்கான பொது பணி நிலைத்திறன் அடிப்படையில் பணி செய்வதால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை மாறுதல் நீக்கக்கோருதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றி தரும்படி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சமர்ப்பித்தனர்.