
இதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் டாக்பியா சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்டத்தின் டாக்பியா முன்னாள் மாவட்ட செயலாளரும், ஓய்வு பெற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ஆசிரியதேவன்
தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அருணகிரி,
மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள், விற்பனையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சில மாவட்டங்களில் பயிர் கடன் பட்டுவாடாவில் விதிமுறைகள் என்று கூறி பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
பயிர் கடன், மகளிர் குழு கடன் அனைத்திற்கும் உரிய மீது ஏல நடவடிக்கை செய்யப்பட்ட இழப்புத் தொகையினை எவ்வித நிபந்தனை இன்றி சங்கத்தின் நட்ட கணக்கிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
செயலாளர் பணி மாறுதலுக்கான பொது நிலை திறன் அடிப்படையில் பணி மாறுதல் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றி தர வேண்டும். என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்