
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை சட்டக்கல்லூரியில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் கணேசன் கூறுகையில் :- பல்வேறு சிரமங்கள், பிரச்சனைகளை தீர்க்கக்கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 03.04.2023 இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் மனு அளிக்கிறோம்.
எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் 24.04.2023 அன்று தமிழகத்தில் உள்ள 4400 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்கள், விற்பனையாளர்கள் குடும்பத்துடன் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணி நடத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிப்பது என்றும், மாநில தொழிற்சங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 170 சங்கங்களின், பணியாளர்கள், ரேசன்கடை விற்பனையாளர்கள் 700 பேர் இன்று மதுரையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டோம் என கூறினார். எங்களது கோரிக்கைகள்
1.பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கடன் தள்ளுபடி தொகைகளை முழுமையாக வட்டியுடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.
கடன் தள்ளுபடியில் விதிமீறல் நகைக்கடன் ஏல நடவடிக்கைகளில் நஷ்டம் என்று கூறி பணியாளர்களின் ஓய்வு கால பலன்களை நிறுத்தி பழிவாங்குவது கைவிடப்பட வேண்டும்.
செயலாளர் பொதுப்பணிநிலைத்திறனில் குறைகள் களையப்படவேண்டும்.
ரேசன்கடை பணியாளர்களின் பல்வேறு பிரச்சனைகள் இன்னல்கள் தீர குழு அமைத்து தீர்க்கப்பட வேண்டும்.
பல்நோக்கு சேவை மைய திட்டத்தில் சங்கங்களை நட்டத்திற்குள்ளாக்கும் வகையில் தேவையற்ற உபகரணங்களை வாங்க நிர்ப்பந்திப்பது நிறுத்தப்பட வேண்டும்.
நகர கூட்டுறவு கடன் சங்கப்பணியாளர்களுக்கு அமைக்கப்பட்ட ஊதியக்குழு அறிக்கை விரைவில் பெற்று புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு புதிய ஊதியக்குழு உடனே அமைத்திட வேண்டும்.
தணிக்கைத்துறையின் கட்டுப்பாடற்ற போக்கை தடுத்திட கூட்டுறவு தணிக்கைத்துறையை கூட்டுறவுத்துறையின் பதிவாளர் தலைமையின் கீழ் கொண்டுவர வேண்டும் அல்லது பட்டயத்தணிக்கைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
அனைத்து பணிநிலைக்கும் பணிமூப்பு பட்டியல் தயாரித்து பதவி உயர்வுகள் உடன் வழங்கப்பட வேண்டும்.
10.தொலைதூரங்களில் பணியாற்றும் ரேசன்கடை பணியாளர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் அருகாமையில் உள்ள பணியிடங்களில் மாற்றம் செய்ய வேண்டும்.
அங்காடிகளுக்கு பொருட்கள் எடை குறைவின்றி வழங்க வேண்டும்.
12.கேரளாவில் உள்ளது போன்று கூட்டுறவு சங்கப்பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். என கூறினார்.