
இந்த 378 வது நாள் அன்னதானத்தை திருமங்கலம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் இருளப்பன் மற்றும் செயலாளர் சக்கையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும் மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று “மாற்றுத்திறனாளிகளுக்கு விருந்து” வழங்கும் திட்டத்தை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் 40- க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் திருமங்கலம் கவுன்சிலர் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஒரு வருடமாக அன்புடன் உபசரித்து உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளை மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் மனதார பாராட்டினர்.
இந்நிகழ்வில் அன்னை வசந்தா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி, துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சித்ரா ரகுபதி, பொருளாளர் அருள்ஜோதி, கௌரவ ஆலோசகர்கள் காளியப்பன், அழகர்சாமி, டிரஸ்டி குருபிரசாத், அன்னபூரணி மற்றும் நிர்வாகிகள் லோகேஸ்வரி, அய்யம்மாள், மலர்விழி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் துணைச் செயலாளர் ரகுபதி நன்றியுரை கூறினார்.