
மதுரை சினிப்ரியா திரையரங்கில் விடுதலை திரைப்படம் வெளியானதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
விடுதலை படத்தை பார்ப்பதற்காக வந்த கதாநாயகன் சூரிக்கு ஆளுயர மாலை அணிவித்து ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் ரசிகர்களோடு அமர்ந்து திரைப்படத்தை சூரி பார்த்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து சூரி கூறுகையில்:-
நல்ல திரைப்படத்தை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்த திரைப்படத்தையும் வெற்றி படமாக கொண்டு செல்வது ரசிகர்கள் தான்.
நான் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படத்தை எனது ரசிகர்கள் வெற்றியுடன் கொண்டாடி வருகின்றனர்.
ரோகினி திரையரங்கில் நடைபெற்ற அனுமதி மறுப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூரி,
எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்றுதான் என்பதை தெரியப்படுத்த தான் திரையரங்கு வந்தது. நீ நான் என்ற வேறுபாடு திரையரங்கிற்கு கிடையாது.இந்த சம்பவத்திற்கு நான் வருந்துகிறேன் என கூறினார்.