
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
அந்த வகையில் மதுரையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்வில்
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் கணேஷ்பிரபு, மற்றும் பகுதி கழக செயலாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.