
மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நரம்பியல்துறை மயக்கவியல் நிபுணர் மற்றும் நியூரோ கிரிட்டிகல் கேர் ஆலோசகர் டாக்டர். பி. நிஷா கூறியதாவது
“நரம்பியல் சிகிச்சை என்பது நரம்பியல் கோளாறு அல்லது நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மிகவும் தனித்துவம் வாய்ந்த மருத்துவ பகுதியாகும். இந்த நோயாளிகளுக்கு சிறந்த மேற்பார்வை மற்றும் தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படுகிறது. இவற்றிற்கு இதற்கென சிறப்பு பயிற்சி மருத்துவ குழுவிற்கு தேவைப்படுகிறது. நியூரோ அனாட்டமி, நியூரோ பிசியாலஜி, நியூரோ இமேஜிங், மற்றும் நரம்பியல் நெருக்கடிகளை நிர்வகித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் இந்தியாவில் உள்ள தலைசிறந்த நரம்பியல் மற்றும் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்களால் நிறுவப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் மற்றும் பிற உடல்நல பராமரிப்பு நிபுணர்கள். சிக்கலான நரம்பியல் பிரச்சனைகள் உள்ள நோயாளிகளை திறம்பட நிர்வகிப்பதற்கு தேவையான அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வகுப்பறை பயிற்சி, நடைமுறை பயிற்சி மற்றும் பட்டறை பயிற்சியின் கலவையாக அமையும். நியூரோ கிரிட்டிகல் கேர் கோர்ஸ் தொடங்கப்பட்டிருப்பது தென் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும்.
இரண்டு நாள் படிப்பு மார்ச் 25, 2023 முதல் மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் தொடங்குகிறது. டெல்லி எய்ம்ஸ், பிஜிஐ சண்டிகர், நிம்ஹன்ச் பெங்களூர், சிஎம்சி வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 60 பிரதிநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் பாடத்திட்டத்தில் பங்கேற்கின்றனர்.”
இதுகுறித்து டாக்டர். பிரவீன் ராஜன்-ஜேடிஎம்எஸ் அப்போலோ மருத்துவமனை, மதுரை அவர்கள் பேசுகையில் “அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நரம்பியல் அவசர நிலை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த சிகிச்சையை வழங்குவதற்காக பிரத்தியேக நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவை அறிமுகப்படுத்தி நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. நரம்பியல் சிகிச்சை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த மருத்துவ துறையாகும். இது நரம்பியல் காயங்கள் அல்லது கோளாறுகள் உள்ள நரம்பியல் நோயாளிகளின் மேலாண்மையை
கையாள்கிறது. இந்த நோயாளிகளுக்கு தீவிர கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட சிகிச்சை வழங்குவதற்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது. பக்கவாதம், அதிர்ச்சிகரமான மூளைக்காயம், மூளை மற்றும் முதுகெலும்பு கட்டிகள், தலையில் காயங்கள் மற்றும் வலிப்பு தாக்கங்கள் போன்ற முக்கியமான நரம்பியல் பிரச்சனைகள் கொண்ட நோயாளிகளை திறம்பட நிர்வாகிப்பதற்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை மருத்துவ நிபுணர்களுக்கு வழங்குவதற்காக இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.”
அப்போலோ மருத்துவமனையின் மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி திரு. நீலக்கண்ணன் கூறுகையில் “உலக தலை காயம் தினத்தை முன்னிட்டு மூளை காயத்தில் இருந்து குணமடைந்த இருவர் தங்களின் அனுபவங்களை பற்றி விவரித்தனர் அவர்களின் பேச்சு எங்கள் அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை துறையின் வல்லுநர்களின் திறன் குறித்து நாங்கள் பெருமைப்படும் வகையில் இருந்தது.”
மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர். எஸ். என். கார்த்திக் கூறுகையில் “இடது பக்க பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 60 வயது ஆணுக்கு மூளையில் அழுத்தம் அதிகரித்து ரத்தக் கசிவு ஏற்பட்டு சுய நினைவற்ற நிலையில் இங்கு அழைத்துவரப்பட்டார் அவருக்கு முக்கியமான உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சை உடனடியாக தாமதமின்றி எங்களது மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்டு பின்னர் பக்கவாத பிரிவுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டார்.”
மேலும் டாக்டர்கள் குழு டாக்டர். எஸ். மீனாட்சி சுந்தரம் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர், டாக்டர். பி. சுரேஷ் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர், டாக்டர். எஸ். சுந்தர்ராஜன் முதுநிலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ஜே கெவின் ஜோசப் முதுநிலை ஆலோசகர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மார்க்கட்டிங் மண்டல பொது மேலாளர் கே. மணிகண்டன், அப்போலோ மதுரை தலைமை அதிகாரி டாக்டர். நிகில் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.