
பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள நடிகை குஷ்பூவுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடர்ந்து இடைவிடாமல் 365 நாளுக்கு மேலாக தினமும் ஏழை எளியோர்களுக்கு உணவை வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி கடிதம் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் அந்த கூறியுள்ளதாவது:-
என் பெயர் p.அமுதவள்ளி நான் 2 ஆம் வகுப்பு வரை பயின்ற சாதாரண பெண்மணி. என் கணவர் தள்ளுவண்டியில் கடலை பருப்பு வியாபாரம் செய்து வந்தவர். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஓர் ஆண் பிள்ளை . இவர்களில் ஒருவர் ஆசிரியராகவும், ஒருவர் செவிலியராகவும் மற்றொருவர் ஓட்டுநராகவும் பணிபுரிகிறார்கள். மூவருக்கும் திருமணம் நடைபெற்று நல்ல நிலையில் உள்ளார்கள்.
என் முதுமைக் காலத்தில் என் தாயாருக்குச் சேவை செய்வதாக எண்ணி என் தாயாரின் பெயரில் ஓர் டிரஸ்டினை நிறுவி [ அன்னை வசந்தா டிரஸ்ட் ) அதில் தினசரி 60 வயதிற்கு மேற்பட்ட 70 முதியவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறோம்.
நீங்கள் பன்முகத் திறமைக் கொண்டவராக இருக்கிறீர்கள். உதாரணமாக திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி நிகழ்ச்சி தொகுப்பாளர் இவை அனைத்தையும் தாண்டி சிறந்த குடும்பத் தலைவியாகச் சிறப்பாகச் செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள். என்பதை இந்நாடும் நானும் அறிவேன். நீங்கள் இந்த நிலையை அடைவதற்கு எவ்வளவு இன்னல்களை சந்திருத்திருப்பீர்கள் என்பதனை ஒரு பெண்ணாகிய நான் உணர்கிறேன்.
ஏனென்றால் ஒரு பெண் அரசியல்வாதிக்கும், ஒரு பெண் நடிகருக்கும் எவ்வளவு பேச்சுக்களும் ஏச்சுக்களும் இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். இரும்பு இதயத்தோடு இன்னல்களை சந்தித்து பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி ஏற்றமைக்காக எங்களுடைய பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நீங்கள் இந்த பொறுப்பை ஏற்றிருப்பது என் போன்ற சாமானிய பெண்மணிகளின் வாழ்வும் மலரப்போகிறது என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. தங்கள் பணி மென்மேலும் சிறந்து மேலும் பல்வேறு பதவி பெற்று அடிதட்டு பெண்களின் வாழ்வு முன்னேற தொடர்ந்து நீங்கள் செயல்பட வாழ்த்துகிறேன்.
மேலும் உங்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என ஆவலாக உள்ளேன். என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.