Saturday , June 3 2023
Breaking News
Home / இந்தியா / ஃபேன் ஆடுனது.. சோபா திடீர்னு நகர்ந்தது.. நிலநடுக்கம் வந்த 4 நிமிஷம் இருக்கே…! – குஷ்பு அதிர்ச்சி ட்வீட்
MyHoster

ஃபேன் ஆடுனது.. சோபா திடீர்னு நகர்ந்தது.. நிலநடுக்கம் வந்த 4 நிமிஷம் இருக்கே…! – குஷ்பு அதிர்ச்சி ட்வீட்

    டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகை குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், இந்தியாவில் டெல்லி, ஸ்ரீநகர் உட்பட வடமாநிலங்களில் உணரப்பட்டது. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வு மையம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. பைசாபாத்திலிருந்து தெற்கு, தென்கிழக்கே 156 கிலோ மீட்டர் தூரத்தில், 184 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நலடுக்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.

    இந்தியாவின் தலைநகர் டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.டெல்லியில் வீட்டில் உள்ள சோபா, கட்டில் உள்ளிட்ட அதிர்ந்த நிலையில், பொருட்களும் கீழே விழுந்தன. பேன்களும் அசைந்தன.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வேகமாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகை குஷ்பு ட்வீட் செய்துள்ளார். அவர் தனது பதிவில், “ டெல்லி முழுவதும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், சுமார் 4 நிமிடம் வரை அது நீடித்த நிலையில் மின்விசிறிகளும், விளக்குகளும் அசைந்ததாகவும், சோப்பாக்கள் அடியிலிருந்து சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா மட்டுமன்றி, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் , கிர்கிஸ்தான் மற்றும் சீனாவிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டது.

    Bala Trust

    About Admin

    Check Also

    தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

    இரத்தம் வேண்டுமா?
    NKBB TECHNOLOGIES