
மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக தொடர்ந்து ஏழை எளியோர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கா.கவியரசு தலைமையில், மதுரை கே.புதூர் காந்திபுரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை உணவு மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புறநகர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் சரவணக்குமார் சிறப்பாக செய்திருந்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் ஷர்மிளா பானு கலந்து கொண்டார்.
இதில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வடக்கு மாவட்ட துணைத்தலைவர்கள் ஷேக் அப்துல்லா, இன்சூரன்ஸ் ராஜா, மணிகண்ட பிரபு,
மற்றும் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள்
பிரகாஷ், பாலமுனீஸ்வரன், அசாருதீன், மாவட்ட மகளிரணி தலைவி அனிதா ரூபி, மாவட்ட செயலாளர் இளமி.நாச்சியம்மாள், மாவட்ட துணைத்தலைவி நஸ்ரின், துணைச் செயலாளர்கள் ரஹ்மத்பீவி, திவ்யபாரதி, சுமதி, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்க நிர்வாகிகள் வீரமணி பிரபு, ஜெயபாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.