
ரூ.1.18 கோடி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
மும்பை,
மும்பையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக கூறி ஒரு கும்பல் மாணவர்களிடம் இருந்து ரூ.1.18 கோடி மோசடியில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜே.ஜே.மார்க் மற்றும் எம்.ஆர்.ஏ. மார்க், சயான், அக்ரிபாடா போலீஸ் நிலையங்களில் மட்டும் 7 வழக்குகளை பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மருத்துவ சீட் மோசடி வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீசாருக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் மோசடி கும்பல் மராட்டியம் மட்டுமின்றி டெல்லி, கொல்கத்தா, குஜராத் போன்ற வெளிமாநில மாணவர்களிடமும் மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் மோசடி தொடர்பாக 6 பேரை கைது செய்து இருந்தனர். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி பிரசாந்த் போபத் பட்மே என்ற ருட் பாட்டீலை தேடி வந்தனர். இந்தநிலையில் அவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.