Saturday , June 3 2023
Breaking News
Home / உலகம் / அதிகரித்து வரும் கொரோனா; அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை..!
MyHoster

அதிகரித்து வரும் கொரோனா; அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை..!

கொரோனா பரவல் குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரங்கள்சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு வகையான வைரஸ் பாதிப்புகளை தவிர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

Bala Trust

About Admin

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES