
நாட்டுப்புற கலைஞர்களை மதுரை மாவட்டம் துவரிமான் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி பாராட்டினார்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மன்றம் நடத்திய இளம் கலைஞர் ஊக்குவிக்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மோகன், பிரகாஷ் மற்றும் தீபன் ராஜ் ஆகியோர் இயல் இசை நாடக மன்றம் பல்வேறு மாவட்டங்களில் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தியதை பாராட்டி மதுரை மாவட்டம் துவரிமான் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி பொன்னாடை போர்த்தி பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் ஆசான்கள் ஆறுமுகம், இருளாண்டி மற்றும் கலை வளர்மணி சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.