
எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயவாக்குவதை கண்டித்து மதுரை தல்லாகுளம் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு மாநகர் காங்கிரஸ் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையிலும்,5-ஆம் பகுதி காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான தல்லாகுளம் முருகன் முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், மலர்பாண்டி, பறக்கும் படை பாலு, ஐஎன்டியூசி மாநில செயலாளர் ஜீவன்மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் துரைஅரசன் சையதுபாபு, மாவட்ட மயிலா காங்கிரஸ் தலைவர் ஜானவாஸ் பேகம் சர்க்கிள் தலைவர் ஃபிலிம் ராதாகிருஷ்ணன் மீனாட்சிசுந்தரம் உள்பட வார்டு தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.