
மதுரை மாநகராட்சியில் தினமும் 600 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது இவற்றை மொத்தமாக கொண்டு சென்று மாநகராட்சி வெள்ளக்கல் உரக்கிடங்குகளில் பிரிக்கின்றனர்.
மாநகராட்சியின் சிரமத்தை போக்க மதுரை சேது இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் வேஸ்ட் டு வெல்த் எனும் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர் இந்த செயலியில் உள்ள க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து வீடுகளில் குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்குவதற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெறும் முதல் மூன்று பேருக்கு பட்டு சேலைகள் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த திடக்கழிவு மேலாண்மை நிகழ்வில் மதுரை மாநகராட்சி வார்டு எண் 16 மற்றும் சேது பொறியியல் கல்லூரி இணைந்து செயல்படுகின்றனர் இந்த நிகழ்வின் அனைத்து ஸ்பான்சர்களையும் மதுரை தேனி ஆனந்தம் வழங்குகிறது.
மேலும் இந்த நிகழ்வை மதுரை நல்லோர் வட்டம் குழு ஒருங்கிணைக்கிறது. இந்த நிகழ்விற்கு மதுரை மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவரும் வார்டு எண் 16 ன் மாமன்ற உறுப்பினர் ஜெயராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி பேராசிரியைகள் சிவரஞ்சனி, பரமேஸ்வரி, மற்றும் நல்லோர் வட்டம் சி.பி ரவி அறிவழகன்,விக்டர், சந்திரசேகரன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த வார்டில் உள்ள ஆயிரம் வீடுகளை இந்த செயலியின் மூலம் கண்காணித்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்து வாங்க உள்ளோம். இந்த வார்டில் முழுவதும் சரியான பிறகு மற்ற 99 வார்டுகளுக்கும் இந்த செயலியை செயல்படுத்த இருக்கிறோம் என்று சேது பொறியியல் கல்லூரி பேராசிரியைகள் கூறினர்