
இந்நிகழ்வின் போது 65 வயதான மகளிர்களுக்கு பல்லாங்குழி, தாயகட்டை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் 60-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மதிய உணவு மற்றும் வெயிலுக்கு இதமான தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.
அன்னதானத்தை முன்னாள் கவுன்சிலர் பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் அய்யனார், அசோகன் தொடங்கி வைத்தனர். இவ்விழாவிற்கு டிரஸ்ட் தலைவர் அமுதா பழனி முருகன் தலைமை வகித்தார். திருமங்கலம் மக்கள் நலச்சங்க செயலாளர் இ.ரா.சக்கையா முன்னிலை வகித்தார்.
டிரஸ்ட் செயலாளர் திருமதி சித்ரா ரகுபதி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் அறங்காவலர்கள் குருபிரசாத், அன்னபூரணி, அழகர்சாமி, அய்யம்மாள், ஆறுமுகம், ராமராஜ், விஜயலட்சுமி, சங்கர், சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் துணைச் செயலாளர் எஸ்.எம் ரகுபதி நன்றியுரை கூறினார்.