
இந்நிகழ்விற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தோழர்கள் நீதிராஜா, பாபு, பிரேம்குமார், நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், ஜோயல்ராஜ், கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
GPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை டி.ஏ சரண்டர் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும்.
தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலவரை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலவரை ஊதியம் வழங்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை வரன்முறை படுத்த வேண்டும்.
7-வது ஊதிய குழுவின் 21 வது மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.