
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் சோழன்.சி.தா.பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி, மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் ஒப்புதலின்படி,
உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மதுரை மாவட்ட தலைவர் முத்துராஜன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.
அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக உமா மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரி பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்தரன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார்.
அருகில் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி.நரசிங்கப்பெருமாள், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் ஆகியோர் உள்ளனர்.