
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு அதிமுகவின் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்ஏ சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.
தொடர்ந்து ரோப்கார் வழியாக மலைக் கோயிலுக்கு சென்ற அவரை திருக்கோயில் நிர்வாகம் சார்பாக வரவேற்று சிறப்பு பூஜையில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் காண்பிக்கப்பட்டது. மேலும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அவருடன் நகர அதிமுக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் ரோப்கார் வழியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கீழே இறங்கி வந்தார். அப்போது கோயிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஏராளமானோர் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் என்ற பந்தா இல்லாமல் பொதுமக்களுடன் எளிமையாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ அவர்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்