
சேலம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது முத்துமலை முருகன் திருத்தலம்.
தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளை மிஞ்சும் விதமாக இந்த கோயில் சேலத்துக்கு அருகே உள்ளது. 146 அடி உயர கொண்டு எழுந்தருளியுள்ளது.
உலகிலேயே முருகனுக்காக அமைக்கப்பட்ட சிலையில் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை 140 அடி உயரமாகும். ஆனால் இந்த சேலம் முத்துமலை முருகன் சிலையின் உயரமோ 146 அடியாகும்.
இந்த புகழ் பெற்ற முத்துமலை முருகன் கோவிலில் மதுரையின் பிரபல தொழிலதிபர் K.L.B சுந்தரம் தனது குடும்பத்தினருடன் வந்து இன்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மகன்கள் மோகன்குமார் மணிராஜ், திருமதி கார்த்திகா மோகன்குமார், திருமதி கனகலட்சுமி மணிகண்டன் வந்திருந்தனர்.