
ஒரு கோடி பெண்களுடன் செல்பி திட்டத்தை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மதுரையில் துவக்கி வைத்தார்.
பாரதிய ஜனதா கட்சி மகளிரணி சார்பாக மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பெண்களுடன் செல்பி எடுக்கும் திட்டத்தை பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே நடைபெற்ற நிகழ்ச்சியின் போது தொடங்கி வைத்தார்.
முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்விற்கு பாஜக மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள், மாநில மகளிரணி தலைவர் உமாபாரதி, மகளிரணி மாவட்ட தலைவர் ஓம்சக்தி.தனலட்சுமி, துணைத் தலைவர்கள் ஜெயவேல், குமார், சத்தியம் செந்தில்குமார், மீனா, மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.