
இந்நிகழ்விற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் வரவேற்புரை ஆற்றினார்.
மாநில செயலாளர் சித்திக் தொகுப்புரை நிகழ்த்தினார்.
மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்புரையாற்
றினார். மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் ரபீக் அஹ்மத் சிறப்புரையாற்றினர்.
இறுதியாக மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நன்றி கூறினார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. பைஜு மற்றும் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்ததாவது;
ஒன்றிய பாஜக ஆட்சியில், அனைத்து ரீதியிலும் மோசமான ஆட்சி காரணமாகவும், தேவையற்ற பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் பிற மோசமான கண்காணிப்பு கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்கொண்டது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப் படாததால், நாட்டில் மிகப்பெரிய வேலைவாய்ப்
பின்மை ஏற்பட்டுள்ளது.
அதேப்போல் பெருமுதலாளி
களுக்கு வரைமுறை யில்லாமல் அளிக்கப்பட்ட பல ஆயிரம் கோடி கடன்கள் வராக்கடன்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றது. இது இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தற்போது அதானி குழுமத்தின் பெரும் மோசடியும் இதனுடன் சேர்ந்துள்ளது.ஊழல் முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். கடந்த காலங்களில் பல உயர்மட்ட மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் பலர் வெளிநாடு களுக்கு தப்பிச் சென்றுள்ளதால், கவுதம் அதானியின் பாஸ்போர்ட்டை உடனடியாக பறிமுதல் செய்து அவர் வெளிநாடு செல்லவில்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், அதானியின் அனைத்து ஒப்பந்தங்களையும், வணிகக் கணக்குகளையும், நிதி பரிவர்த்தனை களையும் கண்காணித்து, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த பிப்.23 ம்தேதி அன்று பாரம்பரிய தமிழக கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மேலும், மீன்பிடி உபகரணங்கள், ஜி.பி.எஸ். கருவிகள் உள்ளிட்ட பல பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதல் கண்டனத்திற்
குரியது. தமிழக மீனவர்களை பாதுகாப்பதில் ஒன்றிய அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதையே இத்தகைய தொடர் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
ஆகவே, தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, எதிர்காலத்தில் இலங்கை கடற்படையின் அத்துமீறலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் எனவும்
தங்களின் அரசியல் லாபங்களுக்காக, நாட்டின் பொதுவான ராணுவ வீரர்களை அரசியல் ரீதியாக தமிழகத்திற்கு எதிராக திசைதிருப்பும் வகையில் பேசுவதை காவல்துறை வேடிக்கை பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட வன்முறை போக்கை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தின் அமைதியை கெடுக்க நினைக்கும் இவர்கள் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.