
மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை காந்தி N.M.R.சுப்பராமன் மகளிர் கல்லூரியில் 8ம் ஆண்டு பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் ஜவஹர்பாபு முன்னிலை வகித்தார். கல்லூரியின் காரியதரிசி திருமதி ஜனரஞ்சனி பாய் வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் கோமதி, துணை முதல்வர் முனைவர் மஹிமா நிர்வாக அதிகாரி திருமதி ஸ்ரீரேகா ஆகியோர் முன்னிலையில் விழா இனிதே துவங்கியது.
மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் பொன்முத்துராமலிங்கம் தலைமையேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார். 502 மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்.
கல்லூரியின் காரியதரிசி திருமதி N.M.H.கலைவாணி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.