
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் அதிமுகவினர் இனிப்புகளை வழங்கியும் ஏழை,எளியோருக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்களின் ஆலோசனைப்படி, மதுரை பழங்காநத்தம் பகுதியில் 71 வது வார்டு வட்டக் கழக செயலாளர் ராஜாராம் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் வார்டு பிரதிநிதிகள் ஜெயராஜ்,பூமி,வார்டு துணைத்தலைவர் ஜெயமணி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.