
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு (இ.டி.ஐ.ஐ) அசெஞ்சர் பெட்கிராட் நிறுவனம் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி இணைந்து நடத்திய கடனுதவி விளக்க கூட்டம் மதுரை எஸ்.எஸ் காலனியில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, அங்குச்சாமி, சாராள்ரூபி, ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழில் துவங்குவதற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்க மத்திய, மாநில அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் தர வேண்டும் எனவும், மற்ற வழிமுறைகள் பற்றியும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதுநிலை மேலாளர் சாம் ஜெயக்குமார் நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி வர்த்தக மேலாளர் தங்கமலர் தொழில் முனைவோருக்கு உடனடியாக வங்கி கணக்கை துவக்கி வைத்தார்.
இ.டி.ஐ.ஐ திட்ட அலுவலர்கள் டாக்டர் திருப்பதி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்கள் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார்கள்.
நிகழ்ச்சியின் நிகழ்ச்சியின் முடிவில் துணைத்தலைவர் மார்ட்டின் லூதர் கிங் நன்றியுரை கூறினார்.