
தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக நடைபெற உள்ள ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆதரவு கடிதத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் மாநில தலைவர் தங்கராஜ் வழங்கினார்.
இந்நிகழ்வில் விஸ்வ பிரம்ம ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள்,மாநில பொதுச்செயலாளர் பொன்ராஜ், மாநில பொருளாளர் ஆறுமுகம் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.