பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை சமூக வலைத்தளத்தில் தவறாக சித்தரித்து பதிவு செய்த நபரை கண்டுபிடித்து கைது செய்யக்கோரி, மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் தலைமையிலும், மாநிலச் செயலாளர் சுமன் முன்னிலையிலும், காவல் துணை ஆணையாளர் சாய்பிரனீத் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.
இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.