
மயிலாடுதுறை நகராட்சியில் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. பி. மகாபாரதி நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட துபாஸ் அக்ரஹாரம், செம்மங்குளம், மாயூரநாதர் கீழவீதி, பட்டமங்கலம் ஆராய தெரு ஆகிய பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது,
மயிலாடுதுறை மாவட்டம் தூய்மை மாவட்டமாகவும் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சியை தூய்மை நகராட்சியாக ஆக்குவதற்காக பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு வார்டிலும் மேற்பார்வையாளர், தூய்மை பணியாளர் பெயர் மற்றும் அலைபேசி எண்கள் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளில் குப்பைகள் சாக்கடைகள் ஏதேனும் தேங்கி இருந்தால் உடனடியாக விளம்பர பலகையில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். தூய்மை பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் கூடுதலாக தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுடைய செயல் மிகவும் பாராட்டத்தக்கது. குப்பை அள்ளுவதற்கு கூடுதலாக வண்டிகள் தேவைபட்டால் உடனடியாக ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு கிளை நூலகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, நகர மன்ற உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் திருமுருகன்