
மதுரை கோச்சடையில் உள்ள நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சி.எம் மகுடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
அரசாணை எண் 152 மற்றும் 10 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். நகர சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளாக பணி புரியும் OHT ஆப்ரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உள்பட அனைத்து துறையையும் தனியாருக்கு தாரை வார்ப்பதை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் செயலாளர் கே.கண்ணன், மாநிலத் துணைத் தலைவர் பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் முருகானந்தம் கோரிக்கைகள் குறித்து விளக்க உரை ஆற்றினார்.
சிஐடியூ மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ், பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் பொருளாளர் கே.டி துரைக்கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீதிராஜா நிறைவுறை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் துணைத்தலைவர் நல்லதம்பி நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வில் மேஸ்திரி சங்க செயலாளர் கிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி ராம்தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்