
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாரத்தில் (போடிநாயக்கன்பட்டி) ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கிருஷ்ணப்ரியா, மேகனா, கீர்த்தனா , கீர்த்தனா , கீர்த்தனா , கீர்த்தி ,கீர்த்தி. கே. ஆர், கிருபா. சி ,பரிமளா ஆகியோர் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு நடத்தினர்.
இதன் நோக்கமானது கிராமத்தின் விவசாயம்,நிலஅமைப்பு,பயிர் வகைகள்,வரலாற்றுப் பின்புலம் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வதாகும்.இம்மதிப்பீட்டில் பல கருவிகள் உள்ளன,அதில் சமூக வரைபடம்,வள வரைபடம், காலக்கோடு, இயக்க வரைபடம், குறைகள் மரம்,தினசரி வேலை அட்டவணை போன்ற கருவிகளை மாணவர்கள் பயன்படுத்தினர்.
இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் மற்றும் சிறு,குறு,பெரு விவசாயிகளும் உற்சாகத்துடன் பங்கேற்று தங்கள் சந்தேகங்களை மாணவிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.