
மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக செல்லூரில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயவேல், குமார் செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ராஜ்குமார் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்